வீடுகளில் திருடிய 3 பேர் கைது

Update: 2022-06-28 15:55 GMT


மங்கலம் பகுதியில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் ெபாருட்கள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 பவுன்நகை, 2 வெள்ளி குத்துவிளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருட்டு

மங்கலத்தை அடுத்த கோம்பக்காட்டை சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி (வயது 45). இவருடைய வீட்டின் பூட்டை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடைத்து 7 பவுன் நகையை திருடிச்சென்றனர். இதேபோல் இடுவாயை சேர்ந்த மோகனசுந்தரம் என்பவருடைய வீட்டில் கடந்த 12-ந்தேதி மர்ம ஆசாமிகள் 13 பவுன் நகை, 2 வெள்ளி குத்துவிளக்குகள், 1 காமாட்சி விளக்கு, 2 கொலுசு ரூ.43 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்றனர்.

இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர். மேலும் இன்ஸ்பெக்டர் ராஜவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

3 பேர் கைது

இந்த தனிப்படை போலீசார் திருட்டு நடந்த வீடுகளில் கிடைத்த தடயம் மற்றும் கைரேகைகளை கொண்டு திருட்டில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டம் கடப்பாறைபட்டியை சேர்ந்த ஷாஜகான் மகன் மவுலானாயூசுப் (19), கும்பகோணம் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்த விஜய் (27), தென்காசி விசுவநாதபுரத்தை சேர்ந்த அப்துல்ரசாக் (39) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 பவுன்நகை, 2 வெள்ளி குத்துவிளக்கு, 1 காமாட்சிவிளக்கு, 2 கொலுசு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்