3 ஏக்கர் நிலம் மீட்பு
திக்குறிச்சி மகாதேவர் கோவிலுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் மீட்பு
ஆரல்வாய்மொழி,
விளவங்கோடு தாலுகாவுக்கு உட்பட்ட திக்குறிச்சி மகாதேவர் கோவிலுக்கு சொந்தமான 3 ஏக்கர் நஞ்சை நிலம் பூதப்பாண்டி அருகே உள்ள அழகியபாண்டியபுரம் கிராமத்தில் உள்ளது. இந்த நிலம் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பாளார்கள் பிடியில் இருந்தது. இதனையடுத்து இந்துசமய அறநிலையதுறை நிலங்கள் மீட்பு தாசில்தார் சஜித் முன்னிலையில், கோவில் நிர்வாக அதிகாரி பொன்னி, கிராம நிர்வாக அலுவலர் கலைவாணி, நில அளவையர் அஜித், கோவில் பணியாளர் அய்யப்பன் ஆகியோர் 3 ஏக்கர் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டனர். பின்னர் அதில் கோவிலுக்கு சொந்தமான இடம் என்று அறிவிப்பு பலகையையும் வைத்தனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.60 லட்சம் என்று கூறப்படுகிறது.