2-வது முறையாக ஆப்பக்கூடல் ஏரி நிரம்பியது

ஆப்பக்கூடல் ஏரி 2-வது முறையாக நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Update: 2022-10-13 21:39 GMT

அந்தியூர்

ஆப்பக்கூடல் ஏரி 2-வது முறையாக நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

ஆப்பக்கூடல் ஏரி

அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பர்கூர் மலைப்பகுதியில் உள்ள வரட்டு பள்ளம் அணை கடந்த 4 நாட்களுக்கு முன்பு நிரம்பியது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த உபரிநீரானது கெட்டிசமுத்திரம் ஏரி, சந்தியபாளையம் ஏரி, வேம்பத்தி ஏரி மற்றும் ஆப்பக்கூடல் ஏரிக்கு சென்றது. 

நிரம்பியது

இதன்காரணமாக நேற்று முன்தினம் வேம்பத்தி ஏரி அதன் முழு கொள்ளளவான 13 அடியை எட்டி அதன் உபரி நீர் வெளியேறியது. இந்த உபரிநீரும் ஆப்பக்கூடல் ஏரிக்கு சென்றது. இதைத்தொடா்ந்து ஆப்பக்கூடல் ஏரி அதன் முழு கொள்ளளவான 13.5 அடியை எட்டி அதில் இருந்து உபரிநீா் வெளியேறி வருகிறது. ஆப்பக்கூடல் ஏரி 2-வது முறையாக நிரம்பியதால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் விவசாயிகள் ஆப்பக்கூடல் ஏரிக்கு சென்று அங்கிருந்து வெளியேறும் உபாிநீர் மீது மலர்களை தூவி தங்களுடைய மகிழ்ச்சியை பகிா்ந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்