ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் மாநில அளவில் 2-வது இடம் பிடித்தது

ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் மாநில அளவில் 2-வது இடம் பிடித்தது.

Update: 2022-11-21 16:39 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 288 கிராம ஊராட்சிகளில் 1 லட்சத்து 89 ஆயிரத்து 324 தனிநபர் இல்லங்களில், கடந்த அக்டோபர் மாதம் முடிய 1,88,320 பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இது 98.96 சதவீதம் ஆகும். தனிநபர் இல்ல குடிநீர் இணைப்பு வழங்குவதில் தமிழ்நாட்டில் இரண்டாம் இடத்திலும், அகில இந்திய அளவில் மூன்றாவது இடத்தையும் ராணிப்பேட்டை மாவட்டம் பெற்றுள்ளது.

288 கிராம ஊராட்சிகளில் இன்று வரை 285 கிராம ஊராட்சிகளில் தனிநபர் குடிநீர் இணைப்பு முழுவதுமாக வழங்கப்பட்டுள்ளது. தனிநபர் இல்ல குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதிலும், நீர் பரிசோதனை செய்வதிலும், வீடு தோறும் குடிநீர் இணைப்புகள் வழங்கி அதனை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதிலும் அகில இந்திய அளவில் 60 சதவீதம் ராணிப்பேட்டை மாவட்டம் 4 நட்சத்திர குறியீடுகள் பெற்று சாதனை படைத்துள்ளது.

டெல்லி ஜல்ஜீவன் மிஷன் திட்ட தலைமை அலுவலகத்திலிருந்து நேற்று நடைபெற்ற காணொலி காட்சி கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியனை மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலாளர் நரேந்திர சின்ஹா பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்