வேப்பூர் அரசு மகளிர் கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு; நாளை தொடங்கம்

வேப்பூர் அரசு மகளிர் கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.

Update: 2023-06-10 18:47 GMT

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூரில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில், 2-ம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில் நாளை(திங்கட்கிழமை) காலை 10 மணி அளவில் பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், 13-ந் தேதி காலை 10 மணியளவில் பி.எஸ்சி. கணிதம், இயற்பியல், வேதியியல், உயிர்த் தொழில்நுட்பவியல், கணிணி அறிவியல் என்னும் அறிவியல் துறை பாடப்பிரிவுகளுக்கும் மற்றும் 14-ந் தேதி காலை 10 மணியளவில் பி.பி.ஏ. (வணிக நிர்வாகவியல்) மற்றும் பி.காம் (வணிகவியல்) துறைக்கான இரண்டாம் கட்ட சேர்க்கையும் நடைபெற உள்ளது. இதில் இணையதளம் வழியாக விண்ணப்பித்த அனைத்து மாணவிகளும் கலந்து கொள்ளலாம் என்று கல்லூரி முதல்வர் மணிமேகலை ஜெயபால் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்