2-வது நாளாக ரெயில் சோதனை ஓட்டம்

வள்ளியூர்-நாங்குநேரி இரட்டை ரெயில் பாதையில் 2-வது நாளாக ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது

Update: 2022-09-27 22:04 GMT

வள்ளியூர்:

திருவனந்தபுரம் ெரயில்வே கோட்டம் நாகர்கோவிலில் இருந்து மேலப்பாளையம் வரை மின்மயமாக்கலுடன் புதிய இரட்டை ெரயில் பாதை அமைக்கும் பணிகள் நான்கு கட்டமாக நடந்து வருகிறது. இதில் முதல் கட்டமாக ஆரல்வாய்மொழியில் இருந்து வள்ளியூர் வரையிலான பணிகள் நிறைவடைந்து ெரயில் இயக்கப்பட்டு வருகிறது.

2-ம் கட்டமாக வள்ளியூரில் இருந்து நாங்குநேரி வரை மின்மயமாக்களுடன் கூடிய இரட்டை ெரயில் பாதைப்பணிகள் நிறைவடைந்துள்ளது. இதனை தென்சரக ெரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து வள்ளியூர் முதல் நாங்குநேரி வரையில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் டீசல் என்ஜின் மூலம் ெரயில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடந்தது.

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக வள்ளியூரில் இருந்து நாங்குநேரி வரை மின்மயமாக்கப்பட்ட புதிய வழித்தடத்தில் மின்சார என்ஜின் மூலம் ெரயில் இயக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்