கயத்தாறு பகுதியில் திங்கட்கிழமை 2-வது நாளாக மழை

கயத்தாறு பகுதியில் திங்கட்கிழமை 2-வது நாளாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2022-08-29 12:53 GMT

கயத்தாறு:

கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரகாலமாக வெயில் சுட்டெரித்தது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் இருந்து மேகமூட்டமாக காணப்பட்டது. மதியம் 12 மணிக்கு மழை கொட்ட தொடங்கியது. நண்பகல் 1 மணி வரை கயத்தாறு, வடக்கு இலந்தைகுளம், தெற்கு இலந்தைகுளம் சாலைபுதூர் ஆகிய கிராமங்களில் பலத்த மழை பெய்தது. 2-வது நாளாக நேற்றும் கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்