ஊத்துக்குளி அருகே உள்ள முதலைபாளையம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பாரதிராஜா வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது சந்தேகப்படும்படியான 2 வாலிபர்கள் காரில் வந்துள்ளனர். அவர்களை விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் காரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரில் 2½ கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் திருப்பூர் வீரபாண்டி, லட்சுமி அப்பார்ட்மெண்ட் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் ரஞ்சித் (24), திருப்பூர் தாராபுரம் ரோடு கருப்புசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த ராதா கிருஷ்ணன் என்பவரது மகன் விக்னேஷ் குமார் (27) என்பதும் தெரிய வந்தது. அவர்களிடமிருந்து கார் மற்றும் 2½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.