ஜமாபந்தியில் 294 மனுக்கள் பெறப்பட்டன

பெரம்பலூரில் நடைபெற்ற ஜமாபந்தியில் 294 மனுக்கள் பெறப்பட்டன.

Update: 2023-05-24 18:30 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் 1432-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) அனைத்து தாலுகாக்களிலும் கடந்த 16-ந் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் வேப்பந்தட்டை தாலுகாவில் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் பசும்பலூர் மற்றும் வாலிகண்டபுரம் குறுவட்ட பகுதிகளுக்குட்பட்ட திருவாளந்துறை, அகரம், தொண்டபாடி, நெய்குப்பை மற்றும் அனுக்கூர் ஆகிய கிராமங்களிலும், குன்னம் தாலுகாவில் கீழப்புலியூர் குறுவட்ட பகுதிக்குட்பட்ட சித்தளி (கிழக்கு), சித்தளி (மேற்கு), பேரளி (வடக்கு), பேரளி (தெற்கு) மற்றும் ஒதியம் ஆகிய கிராமங்களிலும், ஆலத்தூர் தாலுகாவில் கொளக்காநத்தம் மற்றும் கூத்தூர் குறுவட்ட பகுதிகளுக்குட்பட்ட கொளத்தூர் (கிழக்கு), தொண்டபாடி, மேலமாத்தூர், அழகிரிபாளையம் மற்றும் ஆதனூர் (வடக்கு) ஆகிய கிராமங்களிலும் நடைபெற்றது.

வேப்பந்தட்டை தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில் 192 மனுக்கள் பெறப்பட்டன. குன்னம் தாலுகாவில் 76 மனுக்களும், ஆலத்தூர் தாலுகாவில் 26 மனுக்களும் என மொத்தம் 294 மனுக்கள் பெறப்பட்டன. இதில் வேப்பந்தட்டை தாலுகாவில் 39 மனுக்களும், குன்னம் தாலுகாவில் 41 மனுக்களும், ஆலத்தூர் தாலுகாவில் 24 மனுக்களும் என மொத்தம் 104 மனுக்கள் ஏற்கப்பட்டன. 190 மனுக்களுக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்