280 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்

280 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்

Update: 2022-07-06 16:19 GMT

புதுக்கடை:

புதுக்கடை போலீஸ் நிலைய தனிப்பிரிவு ஏட்டு சுனில் மற்றும் ரமேஷ் ஆகியோர் நேற்று மாலையில் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சடையன்குழி பகுதியில் வேகமாக வந்த கேரள பதிவெண் கொண்ட ஆட்டோவை தடுத்தி நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பிளாஸ்டிக் கேன்களில் 280 லிட்டர் மண்எண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், ஆட்டோவுடன் மண்எண்ணெய்யை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். விசாரணையில், இனயம் கடற்கரை பகுதியில் இருந்து கேரளாவுக்கு மண்எண்ணெய்யை கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோ டிரைவரான முட்டைக்காடு பகுதியை சேர்ந்த செல்வபிரசாத்(வயது 49) என்பவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மண்எண்ணெய், ஆட்டோ ஆகியவற்றை கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்