280 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
280 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
சாயல்குடி,
ராமநாதபுரம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவஞான பாண்டியன், தலைமை காவலர்கள் குமாரசாமி, முத்துகிருஷ்ணன், தெய்வேந்திரன் ஆகியோர் கடலாடி அருகே கண்டிலான் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 40 கிலோ வீதம் 7 பைகளில் இருந்த 280 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மதுரை கீரைத்துறையை சேர்ந்த சைவத்துரை(வயது 27), வேல்முருகன் (19) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.