சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அன்னதான உண்டியல் வருமானம் ரூ.28 லட்சம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அன்னதான உண்டியல் வருமானம் ரூ.28 லட்சம் கிடைத்துள்ளது.

Update: 2023-01-25 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் அதன் உப கோவிலான திருச்செந்தூர் சிவன் கோவில், நாசரேத் கோவில், கிருஷ்ணாபுரம் கோவில் போன்றவற்றில் உள்ள அன்னதானம் திட்ட உண்டியல்கள் மட்டும் கடந்த 2 நாட்களாக எண்ணப்பட்டன.

கோவில் இணை ஆணையர் கார்த்திக் தலைமையில் ஆய்வாளர் செந்தில்நாயகி, பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், கருப்பன் மற்றும் தூத்துக்குடி ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப் பணிக்குழு, கோவில் பணியாளர்கள் ஆகியோர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் மொத்தம் ரூ.28 லட்சத்து 23 ஆயிரத்து 641 கிடைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்