சென்னை விமான நிலையத்தில் ரூ.28 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்
சென்னையில் இருந்து விமானத்தில், சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.28 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் செல்ல வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனர். அதில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 35 வயது வாலிபர் சுற்றுலா விசாவில் செல்ல வந்தார். அவரிடம் இருந்த சூட்கேசை சோதனை செய்தபோது அதில் ரகசிய அறை வைத்து அதில் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலரை மறைத்து வைத்து கடத்த முயன்றதை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.28 லட்சம் மதிப்புடைய அமெரிக்க டாலரை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், வாலிபரின் பயணத்தை ரத்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.