மரத்தில் அரசு பஸ் மோதி 28 பேர் காயம்

மரத்தில் அரசு பஸ் மோதி 28 பேர் காயம்

Update: 2022-07-23 18:12 GMT

நன்னிலம்

நன்னிலம் அருகே மரத்தில் அரசு பஸ் மோதி 28 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகி்ன்றனர்.

மரத்தில் பஸ் மோதியது

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பஸ் நிலையத்தில் இருந்து நன்னிலத்திற்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை ரவிச்சந்திரன் ஓட்டிச்சென்றார்.

நன்னிலம் அருகே சலிப்பேரி அருகே சென்றபோது சாலையோரம் இருந்த மரத்தில் பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது.

28 பேர் காயம்

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த நன்னிலம் அருகே மேலப்பாளையத்தை சேர்ந்த மகாலிங்கம்(வயது 87), நன்னிலம் கீழ்குடியை சேர்ந்த பத்மா(55), குடவாசல் அருகே ஓகையை சேர்ந்த ராஜமோகன்(53), குடவாசல் திருவிடைசேரியை சேர்ந்த அம்பிகா(33), நன்னிலம் ஸ்ரீவாஞ்சியத்தைச் சேர்ந்த சாரதா(15) உள்ளிட்ட 28 பேர் காயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் நன்னிலம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்த 28 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நன்னிலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நன்னிலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்