ஆயுதப்படை போலீசார் 28 பேர் இடமாற்றம்

விழுப்புரம் மாவட்டத்தில் ஆயுதப்படை போலீசார் 28 பேர் இடமாற்றம்;

Update:2023-03-08 00:15 IST

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட காவல்துறையின் ஆயுதப்படை பிரிவில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வரும் வேல்முருகன், போலீசார்களாக பணியாற்றி வரும் முகம்மதுரபி, சவுந்தரராஜன், ஆனந்த்பாபு, செந்தில், ஜெயசங்கர், சதீஷ், ஆனந்தி, பிரேமா, சாருமதி உள்ளிட்ட 28 போலீசார், மாவட்டத்திற்குள் வெவ்வேறு போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்