இடைத்தேர்தல் நடக்கும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 27-ந்தேதி பொதுவிடுமுறை -தமிழக அரசு அறிவிப்பு

இடைத்தேர்தல் நடக்கும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 27-ந்தேதி பொதுவிடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-02-13 23:50 GMT

சென்னை,

ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதியில் 27-ந்தேதி (திங்கட்கிழமை) இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. எனவே 27-ந்தேதியை பொதுவிடுமுறையாக அரசு அறிவிக்கிறது. அதற்கான உத்தரவை தமிழக கவர்னர் பிறப்பித்துள்ளார்.

27-ந்தேதி விடுமுறை

அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கும் அனைத்து பகுதியிலும் பொதுவிடுமுறை அறிவிக்கப்படுகிறது. ஈரோடு மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் பணியாற்றும் வாக்காளர்களுக்கும் (ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்துள்ளவர்களுக்கு மட்டும்) 27-ந்தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவேண்டும்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு கட்டுப்பாட்டில் உள்ள தொழில்நிறுவனங்கள், அனைத்து கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்