தமிழகத்தில் புதிதாக 279 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 279 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-10-16 14:26 GMT

Image Courtesy: PTI

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் 279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விவரம் பற்றிய தகவல்களை மருத்துவத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 279 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 35,89,013 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 67 பேர், செங்கல்பட்டில் 24 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரு நாளில் மட்டும் 326 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 35,46,850 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 38,048 ஆக உள்ளது. கொரோனா பாதிப்புக்குள்ளாகி தற்போது 4 ஆயிரத்து 115 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்