குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்த 268 பேர் கைது

நெல்லையில் குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்த 268 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-05 19:03 GMT

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தலைமறைவறைவாக இருக்கும் நபர்கள் மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் தலைமறைவாக இருந்த மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர்கள் 268 பேர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதில், தாழையூத்து போலீஸ் நிலைய கொலை வழக்கில் கடந்த 8 மாதங்களாக தலைமறைவாக இருந்த ஊசிபாண்டி என்பவரை போலீசார் மும்பை வரை சென்று கைது செய்துள்ளனர். அவர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தனது அலுவலகத்திற்கு வரவழைத்து பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்