உரிமை கோரப்படாத 266 வாகனங்கள் ஏலம்

தாழையூத்து போலீஸ் நிலையத்தில் உரிமை கோரப்படாத 266 வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது

Update: 2022-10-29 21:51 GMT

நெல்லை மாவட்ட போலீஸ் நிலையங்களில் உரிமை கோரப்படாத 266 வாகனங்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் அனைத்தும் அரசுக்கு ஆதாயம் செய்யும் பொருட்டு நெல்லை முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையம் மற்றும் தாழையூத்து போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அரசின் விதிமுறைக்கு உட்பட்டு தாழையூத்து போலீஸ் நிலைய வளாகத்தில் வைத்து வருகிற 14 மற்றும் 15-ந் தேதிகளில் அந்த வாகனங்கள் பொது ஏலம் நடத்தி விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்த ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் நெல்லை மாவட்ட ஆயுதப்படை வாகன அலுவலகத்தில் வருகிற 12-ந் தேதி முன்பணமாக ரூ.1000 கட்டி டோக்கன் பெற்றுக் கொள்ளவும்.

இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்