நெல்லைக்கு ரெயிலில் வந்த 2,650 டன் கோதுமை
பஞ்சாப்பில் இருந்து நெல்லைக்கு ரெயிலில் 2,650 டன் கோதுமை வந்தது.
நெல்லைக்கு வடமாநிலங்களில் இருந்து அத்தியாவசிய பொருட்களான நெல், கோதுமை, அரிசி மற்றும் விவசாயத்துக்கு தேவையான உரங்கள், கட்டுமான பணிகளுக்கு தேவையான சிமெண்டுகள் மொத்தமாக கொண்டு வரப்படும். அதேபோல் நேற்று காலையில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து 2 ஆயிரத்து 650 டன் கோதுமை நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு சரக்கு ரெயிலில் கொண்டு வரப்பட்டது. மொத்தம் 46 பெட்டிகளில் 53 ஆயிரம் மூட்டைகளில் கொண்டுவரப்பட்ட கோதுமையை ஊழியர்கள் லாரிகள் மூலம் முத்தூர் குடோன் மற்றும் நெல்லையில் உள்ள குடோனுக்கு அனுப்பி வைத்தனர்.
அதேபோல் தஞ்சையில் இருந்து 1,010 டன் நெல் கொண்டுவரப்பட்டது. 21 பெட்டிகளில் கொண்டுவரப்பட்ட நெல், லாரிகள் மூலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.