தூத்துக்குடியில் 264 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான 264 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டதுடன், கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-09-21 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான 264 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டதுடன், கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

புகையிலை பொருட்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை ஒழிப்பதற்காக போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகபெருமாள் மற்றும் தனிப்படை போலீசார் எட்டயபுரம் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு வேகமாக வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை நடத்தினர். அந்த காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், காரில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான தலா 23 மூட்டைகளில் மொத்தம் 264 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

4 பேர் கைது

இதனை தொடர்ந்து காரில் இருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் ஏரலை சேர்ந்த காளிமுத்து மகன் வேல்முருகன் (வயது 32), தூத்துக்குடி பிராப்பர் தெருவை சேர்ந்த பெருமாள் மகன் பெரியசாமி (28), கே.வி.கே.நகர் மேற்கு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (42), போல்பேட்டையை சேர்ந்த முத்துராஜ் (49) என்பது தெரியவந்தது. இவர்கள் கோவையில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்து தூத்துக்குடி, ஏரல் பகுதிகளில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்களுடன், ரூ.64 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்