திருச்சியில் இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி ரூ.26½ லட்சம் முதலீடு பெற்று மோசடி

திருச்சியில் இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி ரூ.26½ லட்சம் முதலீடு பெற்று மோசடி செய்தாக யு.கே.ஆர். புரமோட்டர்ஸ் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-23 19:40 GMT

திருச்சியில் இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி ரூ.26½ லட்சம் முதலீடு பெற்று மோசடி செய்தாக யு.கே.ஆர். புரமோட்டர்ஸ் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

ரூ.26½ லட்சம் முதலீடு

திருச்சி கருமண்டபம் ஜெய்நகர் விரிவாக்க பகுதியை சேர்ந்தவர் டேனியல் லெனின் குமார் (வயது 23). புரோக்கர் ஜேம்ஸ் என்பவர் மூலம் திருச்சி தபால் நிலையம் அருகே செயல்பட்டு வரும் யு.கே.ஆர். புரமோட்டர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர்ரஞ்சித்குமார் (48) டேனியல் லெனின் குமாருக்கு அறிமுகம் ஆனார். கடந்த 2020-ம் ஆண்டு டேனியல் லெனின் குமாரை தொடர்பு கொண்ட ரஞ்சித்குமார், எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியதாக தெரிகிறது. இதை நம்பிய அவர், கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை ரூ.26½ லட்சத்தை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

மோசடி-கைது

ஆனால் ரஞ்சித்குமார், இதுவரை அவருக்கு லாபத்தொகையையும் கொடுக்கவில்லை. முதலீடு செய்த பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதுபற்றி பலமுறை கேட்டும் அவர் உரிய பதில் அளிக்கவில்லை. ரஞ்சித்குமார் ரூ.26½ லட்சத்தை மோசடி செய்தது அப்போது தான் இவருக்கு தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் ரஞ்சித்குமார், அதற்கு உடந்தையாக இருந்த புரோக்கர் ஜேம்ஸ் ஆகிய 2 பேர் மீதும் திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து ரஞ்சித்குமாரை கைது செய்த போலீசார், ஜேம்சை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்