25 ஆண்டுகளுக்கு முன்பு படித்தமுன்னாள் மாணவர்கள் சந்திப்பு

25 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Update: 2023-01-10 11:38 GMT

பல்லடம்

பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1997 - 98ம் ஆண்டில் 12ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் தங்களது குடும்பத்துடன் 25ம் ஆண்டு வெள்ளிவிழா நிறைவில் சந்தித்து கொண்டனர். இந்த நிகழ்வில் தங்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்கள் பாண்டியன், சண்முகம், ஸ்டோன்கார்டு, கந்தசாமி, பழனிசாமி, ராஜரத்தினம், ஹரிகரன், லோகநாயகி, தமயந்தி, கிருஷ்ணவேணி, விஜயலட்சுமி உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு மலர்கொத்து வழங்கி, பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் தங்களது முன்னாள் மாணவர்களை குடும்பத்துடன் அழைத்து நலம் விசாரித்து ஆசீர்வாதம் செய்து வாழ்த்தினர். விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த சந்திப்பையொட்டி 1980,1990ம் ஆண்டில் பிரபலமான, கடலை மிட்டாய், பொறி உருண்டை போன்ற திண்பண்டங்கள் விற்பனை கடை அமைக்கப்பட்டு இருந்தது.

---

Tags:    

மேலும் செய்திகள்