போதைபொருட்கள் விற்ற 25 பேர் கைது

விழுப்புரம் மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்ற 25 பேரை போலீசார் கைதுசெய்தனர். சாராயம் விற்பனை செய்த 40 பேரும் சிக்கினார்கள்

Update: 2022-10-02 18:45 GMT

விழுப்புரம்

அதிரடி சோதனை

தமிழகம் முழுவதும் போதைபொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் இதற்காக காவல்துறை சார்பில் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போதைபொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதும், கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று விழுப்புரம் மாவட்டம் முழுவதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் ஏராளமான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

25 பேர் கைது

இதில் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக விழுப்புரம் அருகே பஞ்சமாதேவி கிராமத்தை சேர்ந்த பிரபாகரன், மயிலம் அருகே சிங்கனூரை சேர்ந்த மருதமலை உள்ளிட்ட 10 பேரையும் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக வானூர் சுந்தர், வெள்ளிமேடுபேட்டை சாந்தி, கிளியனூர் கோவிந்தன், விழுப்புரம் அருகே அய்யங்கோவில்பட்டை சேர்ந்த ராயர் உள்ளிட்ட 15 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் சாராயம் விற்றதாக 40 பேரும் போலீசாரிடம் பிடிபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்