25 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 5 பேர் கைது

பேட்டையில் 25 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-16 19:55 GMT

பேட்டை:

நெல்லையை அடுத்த பேட்டை ஆதம் நகரைச் சேர்ந்தவர் அப்துல் சமது (வயது 65). இவர் பேட்டை ரொட்டிக்கடை பஸ் நிறுத்தம் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று, அப்துல் சமதுவின் கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

போலீசாரின் விசாரணையில், களக்காடு அருகே சிங்கிகுளத்தைச் சேர்ந்த அய்யாத்துரை மகன் ராமராஜன் (30), சங்கனாங்குளத்தைச் சேர்ந்த எட்வர்டு மகன் அன்புராஜ் (29) ஆகியோரிடம் இருந்து புகையிலை பொருட்களை அப்துல் சமது வாங்கியது தெரிய வந்தது. மேலும் அப்துல் சமதுவிடம் இருந்து பேட்டை- சேரன்மாதேவி ரோட்டை சேர்ந்த முகமது இப்ராஹிம் (58) எம்.ஜி.பி. கீழ தெருவை சேர்ந்த முகமது அப்துல் காதர் (52) ஆகியோர் புகையிலை பொருட்களை வாங்கி விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அப்துல் சமது உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்