சேலத்தில் ரெயிலில் கொண்டு வந்த 25 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்-ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சேலத்தில் ரெயிலில் கொண்டு வந்த 25 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வணிக வரித்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2022-11-28 22:41 GMT

சூரமங்கலம்:

சேலம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். செகந்திராபாத்தில் இருந்து கொல்லம் செல்லும் ரெயிலில் சந்தேகப்படும்படியாக வந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர் சேலம் செவ்வாய்பேட்டை மாதவராயன் தெருவை சேர்ந்த நீயேஷ் சாம்ஜி பவார் (வயது21) என்பது தெரிய வந்தது. அவர், ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த 25 கிலோ வெள்ளியை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.16 லட்சத்து 83 ஆயிரத்து 450 என கூறப்படுகிறது. ஆவணங்கள் இல்லாமல் வெள்ளி பொருட்கள் கொண்டு வந்ததால் ரூ.1 லட்சத்து 1,008 ரூபாய் அபராதம் விதித்து வணிகவரித்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்