ரூ.25 கோடியில் விருதுநகர் ெரயில் நிலைய மேம்பாட்டு பணி

ரூ.25 கோடியில் விருதுநகர் ரெயில் நிலைய மேம்பாட்டு பணிகளை பிரதமா் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.;

Update: 2023-08-05 20:21 GMT


ரூ.25 கோடியில் விருதுநகர் ரெயில் நிலைய மேம்பாட்டு பணிகளை பிரதமா் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

ரெயில் நிலையம் மேம்படுத்தும் பணி

விருதுநகர் ெரயில் நிலையம் உள்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு ெரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணியை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

அந்த வகையில் விருதுநகர் ெரயில் நிலையம் ரூ.25 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து விருதுநகர் ெரயில் நிலையத்தில் இன்று காலை தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தொடக்க விழா

மதுரை கோட்ட ெரயில்வே மேலாளர் ஆனந்த் வரவேற்று பேசுகிறார். தொடக்க விழாவில் விருதுநகர் நகரசபை தலைவர் மாதவன், விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், மாணிக்கம் தாகூர் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இதனைத்தொடர்ந்து மாணிக்கம்தாகூர் எம்.பி. கலை நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குகிறார். முடிவில் தெற்கு கோட்ட ெரயில்வே மேலாளர் பிரவீனா நன்றி கூறுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்