ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் 25 பேர் கைது
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜனதாவினர் நேற்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் பொங்கல் தொகுப்பில் தேங்காயை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பா.ஜனதாவினர் 25 பேரை கைது செய்தனர்.