மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 249 மனுக்கள் பெறப்பட்டன

ராணிப்பேட்டையில் நடந்து மக்கள் குறைதீர்வு நாள்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 249 மனுக்கள் பெறப்பட்டது.

Update: 2023-04-10 18:01 GMT

குறைதீர்வுநாள் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, குறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில் நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சர்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மருத்துவத்துறை, கிராம பொதுப்பிரச்சினைகள், குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு வேண்டியும், பொதுநலன் குறித்தும் பொதுமக்கள் மநு அளித்தனர்.

249 மனுக்கள்

மொத்தம் 249 மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை மனுதாரர்களுக்கு வழங்கிட கலெக்டர் உத்தரவிட்டார்.

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், பயனாளி ஒருவருக்கு ரூ.8,500 மதிப்பிலான சக்கர நாற்காலியை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில், துணை கலெக்டர் தாரகேஸ்வரி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் முரளி, கலால் உதவி ஆணையர் சத்திய பிரசாத் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்