2,373 பேர் 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வை எழுதினர்

2,373 பேர் 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வை எழுதினர்

Update: 2022-11-27 18:45 GMT

நாகை மாவட்டத்தில் 2,373 பேர் 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வை எழுதினர். இதனை ஐ.ஜி. சந்தோஷ்குமார் பார்வையிட்டார்.

எழுத்து தேர்வு

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 3552 காலிப் பணியிடங்களுக்கான 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. நாகை மாவட்டத்தில் இ.ஜி.எஸ். பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 10 மணி முதல் பிற்பகல் 12.40 மணி வரை தேர்வு நடைபெற்றது. மாவட்டத்தில் 2,241 ஆண் தேர்வாளர்கள், 640 பெண் தேர்வாளர்கள் என 2,881 தேர்வாளர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.

ஆய்வு

இதில் 2,373 பேர் தேர்வு எழுதினர். 400 ஆண்களும், 108 பெண்களும் தேர்வு எழுத வரவில்லை. நாகையில் நடந்த இந்த தேர்வு மையத்தினை திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்