காட்பாடிக்கு ரெயிலில் வந்த2,630 டன் யூரியா

சூரத்தில் இருந்து காட்பாடிக்கு ரெயிலில் வந்த 2,630 டன் யூரியாடன் யூரியாவை பிரித்து அனுப்பும் பணி நடக்கிறது.

Update: 2023-09-28 13:59 GMT

காட்பாடி

சூரத்தில் இருந்து காட்பாடிக்கு ரெயிலில் வந்த 2 ஆயிரத்து 630டன் யூரியாவை பிரித்து அனுப்பும் பணி நடக்கிறது.

சூரத்தில் இருந்து காட்பாடிக்கு சரக்கு ரெயில் மூலம் 2 ஆயிரத்து 630 டன் யூரியா உரம் நேற்று வந்தது. இதில் வேலூர் மாவட்டத்திற்கு 500 டன், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 500 டன், காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு 730 டன் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கடைகளுக்கு 100 டன், ராணிப்பேட்டை தனியார் கடைகளுக்கு 50 டன், காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கடைகளுக்கு 200 டன் உள்பட என மொத்தம் 2 ஆயிரத்து 630 டன் யூரியா உரம் அனுப்பப்பட உள்ளது.

அதன்படி காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து உர மூட்டைகளை லாரிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்