234 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

234 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-10-13 19:49 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராசு தலைமையில் கோவிந்தநல்லூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சக்திமுருகன் (வயது30) என்பவரது வீடு முன்பு மோட்டார்சைக்கிளில் சாக்கு மூடையை சக்திமுருகனுடன் சேர்ந்து 2 பேர் கட்டிக்கொண்டு இருந்தனர். போலீசாரை கண்டவுடன் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த சக்திவேல் (33), தர்மபுரி மாவட்டம் பென்னகரத்தைச் சேர்ந்த அருள் (22) என்பதும், இவர்கள் 3 பேரும் சேர்ந்து 234 கிலோ புகையிலை பொருட்களை சாக்கு மூடைகளில் கட்டி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்கள், மோட்டார் சைக்கிள், 3 செல்போன், புகையிலை விற்ற ரூ.34 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் 3 ேபரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்