சேலம் மாநகரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 230 போலீசார் இடமாற்றம்

சேலம் மாநகரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 230 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-06-10 21:59 GMT

சேலம், 

இடமாற்றம்

சேலம் மாநகர காவல்துறைக்கு உட்பட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் 155 பேர் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, அம்மாபேட்டையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ரகுநாதன், கருப்பூருக்கும், தெற்கு போக்குவரத்து பிரிவில் பணியாற்றிய செந்தில்குமார், கிச்சிப்பாளையத்திற்கும், சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய பாலசுப்பிரமணியன், வடக்கு போக்குவரத்து பிரிவுக்கும், கிச்சிபாளையத்தில் பணியாற்றிய மாதேஸ், செவ்வாய்பேட்டைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல், கொண்டலாம்பட்டி, பள்ளப்பட்டி, அஸ்தம்பட்டி, சூரமங்கலம், அன்னதானப்பட்டி, கன்னங்குறிச்சி, அழகாபுரம், இரும்பாலை, வீராணம், செவ்வாய்பேட்டை என மாநகரில் ஒரே போலீஸ் நிலையங்களில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் 155 பேர் நேற்று ஒரே நாளில் வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

230 பேர்

அதேபோல், 45 போலீஸ் ஏட்டுகளும், 30 முதன்மை காவலர்களும் பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாநகரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் 155 பேர் என மொத்தம் 230 போலீசாரை இடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடா உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்