சேலம் மண்டலத்தில் 23 கூட்டுறவு சார்பதிவாளர்களை இடமாற்றம் செய்து மண்டல இணைப்பதிவாளர் ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இடமாற்றம்
சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட கூட்டுறவுத்துறையில் நிர்வாக காரணங்களுக்காக பல்வேறு சங்கங்களில் பணியாற்றி வரும் 23 கூட்டுறவு சார்பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, ஆத்தூர் துணைப்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிய கூட்டுறவு சார்பதிவாளர் சக்திவேல், சேலம் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் கடன் மற்றும் விற்பனை பிரிவுக்கும், சேலம் வேளாண்மைத்துறை நிறைவேற்றல் மற்றும் கலைத்தல் பிரிவு கூட்டுறவு சார்பதிவாளர் ரவிச்சந்திரன், சேலம் பொது வினியோக திட்ட கூட்டுறவு சார்பதிவாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்காடு சார்பதிவாளர்
இதேபோல், இணைப்பதிவாளர் அலுவலகத்தில் கடன் மற்றும் விற்பனை பிரிவில் பணியாற்றிய ஷோபன்ராஜ், கொங்கணாபுரம் வட்டார சார்பதிவாளராகவும், சேலம் பொது வினியோக திட்டத்தில் பணியாற்றிய யுவராணி, சேலம் சரக துணைப்பதிவாளர் அலுவலகத்தில் பணியாளர் பிரிவுக்கும், ஏற்காடு வட்டார சார்பதிவாளர் சுகன்யா, பனமரத்துப்பட்டி வட்டாரத்துக்கும், அயோத்தியாப்பட்டணம் வட்டார சார்பதிவாளர் ரேவதி, வீட்டுவசதி சார்பதிவாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சேலம், ஓமலூர், மகுடஞ்சாவடி, சங்ககிரி வட்டாரங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வந்த கூட்டுறவு சார்பதிவாளர்கள் பூபதி, வில்லவன், அழகுமலை, விக்னேஷ்குமார், சங்கீதா, மணிகண்டன், சரவணன், உதயகுமார், கவிதா, சதீஸ், சுரேஷ்குமார், கார்த்திகேயன், பிரியவதனி, செந்தில்முருகன், புனிதா, சண்முகம், சுஜன் ஆகியோர் பல்வேறு கூட்டுறவு சங்கங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ரவிக்குமார் நேற்று பிறப்பித்துள்ளார். இடமாற்றம் செய்யப்பட்டுள்ள கூட்டுறவு சார்பதிவாளர்கள் உடனடியாக பணியில் சேர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.