ரூ.1½ கோடியில் 23 குப்பை சேகரிக்கும் வாகனங்கள்

நாகை நகராட்சியில் ரூ.1½ கோடியில் 23 குப்பை சேகரிக்கும் வாகனங்களை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.;

Update: 2023-08-17 18:45 GMT


நாகை நகராட்சியில் ரூ.1½ கோடியில் 23 குப்பை சேகரிக்கும் வாகனங்களை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

குப்பை சேகரிக்கும் வாகனங்கள்

நாகை நகராட்சி பகுதியில் குப்பை சேகரிக்கும் வாகனங்களின் பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கி, குப்பை சேகரிக்கும் வாகனங்களின் பணிகளை தொடங்கி வைத்தார். தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்ற தலைவர் மாரிமுத்து வரவேற்றார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கூறியதாவது:-

நாகை தேர்வு நிலை நகராட்சியாக உள்ளது. இங்கு தற்போது ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 25 பேர் வசித்து வருகின்றனர்.

திடக்கழிவு மேலாண்மை

நாகை, நாகூர் ஆகிய 2 நகரங்களை உள்ளடக்கிய நகராட்சியில் தினசரி திடக்கழிவு சேகரிப்பதற்கு போதுமான வாகனங்கள் இல்லாத காரணத்தால் 15-வது மத்திய மாநில நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 67 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில், 23 திடக்கழிவு மேலாண்மை பணிக்கான குப்பை சேகரிக்கும் வாகனங்கள் நகராட்சி சார்பில் வாங்கப்பட்டது.

இதை தொடர்ந்து ஒப்பந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த வாகனங்கள் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ள உள்ளது என்றார். நிகழ்ச்சியில் நகர் மன்ற துணை தலைவர் செந்தில் குமார், நகராட்சி ஆணையர் (பொ) சங்கர், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்