பலசரக்கு கடைக்காரர் வீட்டில் 22 பவுன் நகை மாயம் - போலீஸ் விசாரணை

பலசரக்கு கடைக்காரர் வீட்டில் 22 பவுன் நகை மாயமானது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.;

Update: 2023-03-29 20:48 GMT

அலங்காநல்லூர்

அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர்சேரியை சேர்ந்தவர் வீரமணி (வயது 63). இவரது வீடும், பலசரக்கு கடையும் ஒன்றாக இணைந்து ஒரே இடத்தில் உள்ளது. வீட்டின் பீரோவில் 22 பவுன் நகைகளை வீரமணி வைத்திருந்தாராம். நேற்று பீரோவை திறந்து பார்த்தபோது உள்ளே இருந்த நகைகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்