போலீசார் சிறப்பு விசாரணை முகாமில் 22 மனுக்கள் பெறப்பட்டன

அரியலூரில் நடைபெற்ற போலீசார் சிறப்பு விசாரணை முகாமில் 22 மனுக்கள் பெறப்பட்டன.;

Update: 2023-10-25 19:08 GMT

அரியலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம்கள் நேற்று நடந்தது. முகாமுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். முகாமில் மொத்தம் 22 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்