ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 22 பேர் கைது
ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டையில் அண்ணா சிலை அருகே சுப முத்துக்குமரன் பாசறை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பழைய பஸ் நிலையத்திலிருந்து நடை பயணமாக புறப்பட்ட நபர்களை மின்சார வாரியம் அலுவலகம் முன்பு மறித்து போலீசார் கைது செய்தனர். இதில் 22 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த போராட்டத்திற்கு சுப முத்துக்குமரன் பாசறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திலீபன் தலைமை தாங்கினார்.