சேலம் மண்டலத்தில் 22 கூட்டுறவு சார்பதிவாளர்கள் இடமாற்றம்

சேலம் மண்டலத்தில் 22 கூட்டுறவு சார்பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-06-01 20:57 GMT

சேலம்,

சேலம் மண்டலத்தில் கூட்டுறவுத்துறையில் ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் கூட்டுறவு சார் பதிவாளர்கள் 22 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, சேலம் கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த சார்பதிவாளர் பாலமுருகன், ஆத்தூர் சரக துணைப்பதிவாளர் அலுவலகத்திற்கும், வீரபாண்டி வட்டார கூட்டுறவு சார்பதிவாளர் ஷோபன்ராஜ், சேலம் இணைப்பதிவாளர் அலுவலகத்திற்கும், பெத்தநாயக்கன்பாளையம் கூட்டுறவு சார்பதிவாளர் அமிர்தலிங்கம், வீரபாண்டி வட்டாரத்திற்கும், ஆத்தூர் சரக துணைப்பதிவாளர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் ராதா, அதே அலுவலகத்தில் சட்டப்பணிகள் பிரிவுக்கும், அங்கு பணியாற்றிய சேனாபதி, சேலம் கூட்டுறவு சார்பதிவாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல், மாவட்டத்தில் பல்வேறு அலுவலகங்களில் கூட்டுறவு சார் பதிவாளர்களாக பணியாற்றி வரும் மீனாட்சி, சாதிக் அலி, கார்த்திகேயன், அறிவழகன், திருநாவுக்கரசு, மூகாம்பிகா, வேலாயுதம், கமலக்கண்ணன், கோமதி, தேவகுமார், தீபா, இந்திரா, புனிதா, ரமேஷ், சுகந்தி, முரளிகிருஷ்ணன், சின்னபையன் ஆகியோரும் ஆத்தூர், வாழப்பாடி, மேச்சேரி, தாரமங்கலம், சேலம் உள்பட பல்வேறு அலுவலகங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மண்டலத்தில் மொத்தம் 22 சார் பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்