சென்டிரல் ரெயில் நிலையத்தில் 210 கிலோ கஞ்சா பறிமுதல் - வாலிபர் கைது

சென்டிரல் ரெயில் நிலையத்தில் 210 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் வாலிபரை கைது செய்தனர்.

Update: 2022-07-01 01:27 GMT

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்cதில் நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி தலைமையிலான ரெயில்வே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரவு 11 மணி அளவில் ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் நடைமேடை 8-ல் வந்து நின்றது. அதில் இருந்து சந்தேகப்படும் படியாக நபர் ஒருவர் சாக்கு பையுடன் இறங்கி வந்ததை போலீசார் கவனித்தனர்.

இதையடுத்து அவரை மடக்கி பிடித்த போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அதில் மொத்தம் 21 கிலோ எடையுள்ள 10 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில், அந்த நபர் மதுரை மாவட்டம் மேல மாசி வீதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 21) என்பதும், அவர் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார், அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்