கொரோனாவால் பாதிக்கப்பட்ட 21 பேருக்கு சிகிச்சை

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 21 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Update: 2022-07-01 19:33 GMT

அரியலூர் மாவட்டத்தில் நேற்று அரியலூர் நகர் மற்றும் ஊரக பகுதிகளில் தலா 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. அதில் 19 பேர் வீட்டு தனிமையிலும், 3 பேர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 393 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் 2 தவணை தடுப்பூசியையும் போட்டுக்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்