இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடுமாவட்டத்தில் 21½ லட்சம் வாக்காளர்கள்

கடலூர் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 21½ லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

Update: 2023-01-05 18:45 GMT


23,466 பேர் நீக்கம்

2023-ம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 9.11.2022 அன்று வெளியிடப்பட்டது. அந்த வாக்காளர் பட்டியலில் உள்ளவாறு மாவட்டத்தின் அப்போதைய மொத்த வாக்காளர் எண்ணிக்கை 21 லட்சத்து 34 ஆயிரத்து 802 ஆகும்.

இதையடுத்து கடந்த 9.11.2022 முதல் 8.12.2022 வரையிலான காலத்தில் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் தொடர்பாக சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இதில் பெயர் சேர்ப்பதற்காக 37 ஆயிரத்து 872 மனுக்கள் பெறப்பட்டதில் 36 ஆயிரத்து 750 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இவற்றில் 1,122 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதுபோல் பெயர் நீக்கலுக்காக 24 ஆயிரத்து 180 மனுக்கள் பெறப்பட்டதில் 23 ஆயிரத்து 466 மனுக்கள் ஏற்கப்பட்டன. அவற்றில் 714 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும் அந்த மனுக்களில் இறந்ததாக 10 ஆயிரத்து 747 பேரும், இடம் பெயர்வுக்காக 12 ஆயிரத்து 349 பேரும், இரட்டை பதிவுக்காக 370 பேர் என மொத்தம் 23 ஆயிரத்து 466 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

பெண் வாக்காளர்கள் அதிகம்

இதையடுத்து 2023-ம் ஆண்டுக்கான வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேற்று வெளியிட்டார். அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 10 லட்சத்து 57 ஆயிரத்து 752 ஆண்கள், 10 லட்சத்து 90 ஆயிரத்து 69 பெண்கள், 265 இதர என மொத்தம் 21 லட்சத்து 48 ஆயிரத்து 86 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) ஜெகதீஸ்வரன், தேர்தல் தாசில்தார் பாலமுருகன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்