ஆசிரியர் தூண்டிலில் சிக்கிய 21 கிலோ மீன்

பெரியதாழையில் கடலில் ஆசிரியர் தூண்டிலில் 21 கிலோ மீன் சிக்கியது.

Update: 2022-12-03 18:45 GMT

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே உள்ள போலையர்புரம் பகுதியை சேர்ந்தவர் ஜெரோம் ஆசீர். இவர் ஒரு பள்ளியில் ஆசிரியராக உள்ளார். பள்ளி விடுமுறை நாட்களில் பொழுது போக்கிற்காக கடற்கரையில் மீன் பிடிக்க செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியதாழை கடற்கரையில் தூண்டிலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது தூண்டிலில் பெரிய மீன் ஒன்று சிக்கியது. அதை வெளியே எடுத்து பார்த்த போது 21 கிலோ எடை கொண்ட பாறை வகை மீன் என்பது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்