21 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது

21 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2023-05-05 21:58 GMT

உசிலம்பட்டி

எழுமலை அருகே கோடாங்கி நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வீரணன் மகன் திருநாவுக்கரசு (வயது 31). தாடையம்பட்டியை சேர்ந்தவர் தருமர் மகன் செல்வேந்திரன் (37). இவர்கள் 2 பேரும் கஞ்சா வைத்திருப்பதாக எழுமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் எழுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையான போலீசார் கஞ்சா வைத்திருந்த திருநாவுக்கரசு, செல்வேந்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் 21கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்