20,977 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 ஆங்கிலத்தேர்வு எழுதினர்
20,977 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 ஆங்கிலத்தேர்வு எழுதினர் .989 பேர் வரவில்லை.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பிளஸ்-2 ஆங்கிலத்தேர்வில் 10,352 மாணவர்களும், 11,659 மாணவிகளும் ஆக மொத்தம் 22,011 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 9,772 மாணவர்களும், 11,205 மாணவிகளும் தேர்வு எழுதினர். மொத்தம் 20,977 பேர் மட்டுமே தேர்வு எழுதிய நிலையில் 552 மாணவர்களும், 437 மாணவிகளும் ஆக மொத்தம் 989 பேர் தேர்வு எழுத வரவில்லை. 28 மாணவர்களும் 17 மாணவிகளும் ஆக மொத்தம் 45 பேர் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு பெற்றுள்ளனர். மேற்கண்ட தகவலை மாவட்ட பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.