காவலாளி மயங்கி விழுந்து சாவு
வில்லியனூர் மாதா கோவில் காவலாளி மயங்கி விழுந்து இறந்தார்.
வில்லியனூர்
வில்லியனூர் அருகே உள்ள தமிழக பகுதியான கிழிஞ்சுகுப்பத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 64). வில்லியனூர் புனித லூர்து அன்னை மாதா கோவிலில் காவலாளியாக வேலைசெய்து வந்தார்.
நேற்று மாதா கோவிலில் இரவு பணியில் இருந்த தட்சிணாமூர்த்தி திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வில்லியனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், தட்சிணாமூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.