நகராட்சி அலுவலகம் முற்றுகை

புதுச்சோியில் அடிக்காசு வசூலை முறைப்படுத்த கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகையிட்ட25 நடைபாதை வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-17 17:37 GMT
புதுவையில் சிறு வியாபாரிகளிடம் வசூலிக்கப்படும் அடிக்காசு வசூலை முறைப்படுத்த வேண்டும், தனியாருக்கு விடப்பட்ட அடிக்காசு வசூல் ஏலத்தை ரத்துசெய்ய வேண்டும், ஏல முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி நடைபாதை வியாபாரிகள் சங்கத்தினர் கம்பன் கலையரங்கத்தில்    உள்ள  நகராட்சி  ஆணையர்  அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தனர். இதன்படி அவர்கள் அண்ணா சாலையிலிருந்து ஊர்வலமாக வந்து கம்பன் கலையரங்கத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க கவுரவ தலைவர் கோகுல்காந்திநாத்   தலைமை      தாங்கினார்.   தலைவர் வீர.பாரதி முன்னிலை   வகித்தார்.  தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்