சினிமா பாணியில் அதிமுக ஊராட்சிமன்ற தலைவர் கொடூர கொலை... 9 பேர் அதிரடி கைது

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே கொண்டக்கரையில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் நேற்று முன்தினம் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.;

Update: 2022-05-17 10:38 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரை ஊராட்சிமன்ற தலைவர்மனோகரன். இவர் தமது குடும்பத்தினருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு  திருவிழா ஒன்றில் கலந்து கொண்டு  வீடு திரும்பினார். 

அப்போது மர்ம கும்பல் ஒன்று அவரது கார் மீது லாரியை மோதி நிலைகுலைய வைத்ததுடன், அவரின் மனைவி, குழந்தைகள் கண் முன்னே மனோகரனை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.

இது குறித்து  தகவல் அறிந்த போலீசார், உடலைக் கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுதுடன் தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை வலை வீசி தேடி வந்தனர். கொலை நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், அதனை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 9 பேரை போஈசார் கைதுசெய்துள்ளனர். சுந்தரபாண்டியன், நாகராஜ், ராஜ்குமார், யுவராஜ், ராஜேஷ், பாலா, மது, கோபாலகிருஷ்ணன் மற்றும் சூர்யா ஆகிய 9 பேரை கைதுசெய்துள்ள போலீசார், அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்