தொடர் மழை - முழு கொள்ளளவை எட்டிய குடியாத்தம் மோர்தானா அணை...!
குடியாத்தம் மோர்தானா அணை தொடர் மழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
குடியாத்தம்,
வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணை குடியாத்தம் அடுத்த மோர்தானா அணை கடந்த 2000-ம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது. சுமார் 11.50 மீட்டர் உயரமும் 261 ஒரு மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பெய்த தொடர் மழையால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அணை நிரம்பி வழிந்தது அதன்பின் பலத்த மழையால் பல ஆயிரம் கனஅடி தண்ணீர் அணையில் இருந்து வழிந்தோடியது. தொடர்ந்து பல மாதங்களாக மோர்தானா அணை நிரம்பி இருந்தது.
இந்நிலையில் கடந்த மே மாதம் 5-ஆம் தேதி 11.45 மீட்டர் உயரம் இருந்த மோர்தானா அணை தொடர்ந்து 10 நாட்களாக மோர்தானா அணைப்பகுதியில் பலத்த மழை பெய்தது.
இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு பின் மீண்டு முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தற்போது அணையில் இருந்து 31 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.
வேலூர் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன் நேற்று மாலையில் மோர்தனா அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.