தனியார் நிறுவன ஊழியரை தாக்கி மடிக்கணினி, செல்போன் பறிப்பு

தனியார் நிறுவன ஊழியரை தாக்கி மடிக் கணினி, செல்போனை பறித்து சென்ற 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-05-10 17:27 GMT
தனியார் நிறுவன ஊழியரை    தாக்கி     மடிக் கணினி, செல்போனை பறித்து சென்ற 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தனியார் ஊழியர்
திருவாரூர் மாவட்டம் காரியதுவாரமங்கலம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் கண்ணையன் (வயது 35). இவர் புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதற்காக காமராஜர் சாலையில் உள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்து பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று அதே ஓட்டலில் தங்கியிருந்த 4 நபர்கள் அவரது அறைக்கதவை தட்டியுள்ளனர். உடனே அவர் கதவை திறந்தவுடன் உள்ளே வந்த அவர்கள் மதுபாட்டிலைக் கொண்டு அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மடிக்கணினி-செல்போன் பறிப்பு
மேலும் அவர் வைத்திருந்த மடிக்கணினி, செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிசென்றனர். தாக்குதலில் காயமடைந்த கண்ணையன், புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுதொடர்பாக அவர் பெரியகடை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  தப்பியோடிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்